அன்சிபாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகர் விஜய்யின் தங்கை!…

விளம்பரங்கள்

சென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ருஷ்யம் படத்தில் அவர்களின் மகளாக நடித்திருந்தார் அன்சிபா.இந்த படம் சூப்பர் ஹிட்டானதோடு, தற்போது தமிழில் கமல் -கெளதமி நடிப்பில் தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தை மலையாள த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்குவதோடு, அப்படத்தில் பெண் போலீசாக நடித்திருந்த ஆஷாசரத் மற்றும் வில்லனாக மலையாள நடிகர் கலாபவன் மணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இந்நிலையில், மலையாளத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த அன்சிபா, தமிழிலும் நடித்து விட கடுமையாக முயற்சி எடுத்து வந்தார்.

ஆனால், இந்த வேடத்துக்கு தமிழில் வளர்ந்து வரும் பல நடிகைகளும் போட்டியில் ஈடுபட்டதால், போட்டி பலமாக இருந்தது. கடைசி நேரத்தில் அன்சிபாவை பின் தள்ளிவிட்டு, ஜில்லாவில் விஜய்யின் தங்கையாக நடித்த நிவேதா தாமஸ் அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: