செய்திகள்,திரையுலகம் ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!…

ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!…

ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!… post thumbnail image
சென்னை:-ரஜினி இதுவரை நடித்துள்ள படங்களில் ரயில் சண்டை காட்சிகள் எந்தெந்த படங்களில் இடம்பெற்றதோ அந்த படங்கள் எல்லாமே ஹிட்டடித்துள்ளதாம். அதனால், லிங்காவில் ரயில் சண்டை காட்சி இல்லையென்றபோதும், ரயிலில் சில காட்சிகள் நடப்பது போன்று ரஜினி விரும்பியதால் படமாக்கப்பட்டுள்ளதாம்.தனது செண்டிமென்டுகள் அனைத்தும் கலந்திருப்பதால் லிங்கா வெற்றி உறுதி என்று இப்போதே உற்சாகமாக பெருவிரலை உயர்த்திக்காட்டுகிறார் ரஜினி.

இந்நிலையில், அஜீத்திற்கும் இதேபோல் ரயில் செண்டிமென்ட் உள்ளது. அப்படி அவர் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருப்பதை முன்வைத்துதான் இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் தான் நடிக்கும் 55வது படத்திலும் ரயில் காட்சி வைத்தாக வேண்டும் என்று கதை கேட்டபோது கண்டிசன் போட்டு விட்டாராம் அஜீத். அதனால், சண்டை காட்சி ரயிலில் வைக்க வாய்ப்பில்லாததால் அஜீத், திரிஷா இருவரும் ரயிலில் செல்வது போன்று ஒரு ரொமான்ஸ் காட்சியை வைத்திருக்கிறாராம் கெளதம். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது தனது இந்த செணடிமென்ட் காட்சி கிளுகிளுப்பாக படமாகியிருப்பதில் அஜீத்துக்கு ஏக திருப்தியாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி