செய்திகள்,திரையுலகம் நடிகர் ஆர்யாவுடன் நெருக்கமாக நடனமாட வைத்ததால் கதறி அழுத ஹன்சிகா!…

நடிகர் ஆர்யாவுடன் நெருக்கமாக நடனமாட வைத்ததால் கதறி அழுத ஹன்சிகா!…

நடிகர் ஆர்யாவுடன் நெருக்கமாக நடனமாட வைத்ததால் கதறி அழுத ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-ஆர்யாவும், ஹன்சிகாவும் இணைந்து நடிக்கும் மீகாமன் படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்களும் ஒரு தீம் பாடலும் இருக்கிறது. இரண்டு பாடல்களில் ஒன்று மதன் கார்க்கி எழுதியுள்ள மூட் சாங். அதாவது காமத்தின் வலியை ஹன்சிகா, ஆர்யாவை மனதில் நினைத்து பாடுவதாக அந்த பாடல் அமைந்துள்ளது. அந்த பாட்டில் ஹன்சிகாவும், ஆர்யாவும் மிகவும் நெருக்கமாக நடித்தாக கூறப்படுகிறது.

எனக்குன்னு தமிழ்நாட்டில் ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது. அதை இந்த பாட்டு கெடுத்திடும் என்று சொல்லி கதறி அழுதிருக்கிறார் ஹன்சிகா. இந்த தகவலை சொன்னது படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனிதான்.படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனை சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: பாடல் எடுத்து முடித்த பிறகு ஹன்சிகா கண்ணீர்விட்டு அழுதார். எனக்கு தமிழ்நாட்டுல ஒரு இமேஜ் இருக்கு அதை இந்த பாட்டு அபெக்ட் பண்ணிடும்னு வருத்தப்பட்டார். அவருக்கு இந்த மேடையின் மூலமா ஒரு உறுதியை சொல்லிக்கிறேன். எந்த விதத்திலும் உங்கள் இமேஜை இந்த பாட்டு பாதிக்காது. எடிட் செய்யப்பட்டு எல்லோரும் பார்க்கும்படியான தரமான பாடலாக இது இருக்கும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி