செய்திகள் சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…

சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…

சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!… post thumbnail image
சியோல்:-இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஜப்பானிய வீரர்கள் மற்றும் குடிமக்களை கவுரவப்படுத்தும் வகையில், தலைநகர் டோக்கியோவுக்கு அருகே ‘யாசுகுனி’ என்ற பெயரில் போர் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை, ஜப்பானின் ராணுவக்கொள்கையின் அடையாளமாகவே தென்கொரியாவும், சீனாவும் கருதுகின்றன. இதனால் இந்த நினைவாலய விவகாரத்தில் இரு நாடுகளும், ஜப்பானுக்கு அடிக்கடி கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த நினைவாலயத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே நன்கொடை அளித்துள்ளார். மேலும் 2–ம் உலகப்போரின் 69–வது நினைவு தினத்தையொட்டி, ஜப்பானிய கேபினட் மந்திரிகள் 2 பேர் அந்த, நினைவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.இது தென்கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜப்பானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தென் கொரியா, ஜப்பானின் கடந்த கால அனுபவங்களை எண்ணிப்பார்த்து, தங்களின் அணுகுமுறைகளை விட்டால் மட்டுமே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் என்பதை அந்த நாட்டு அரசியல்வாதிகள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி