செய்திகள்,திரையுலகம் கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…

கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…

கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!… post thumbnail image
சென்னை:-இதுவரை நடிகர் விஜய்யின் படங்களுக்கு முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள்தான் பெரும்பாலும் இசையமைத்து வந்துள்ளனர். ஆனால், சினிமாவுக்கு வந்து சில படங்களிலேயே விஜய் படத்திற்கு ஒருவர் இசையமைத்திருக்கிறார் என்றால் அவர் அனிருத்தான்.

இதற்கிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத்தே இசையமைத்து வருவதோடு, மேலும் சில முன்னணி ஹீரோக்களும் அனிருத் பக்கம் திரும்பியுள்ளனர். அதனால் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களாக கமிட்டாகி வருகிறார் அனிருத்.

ஆனால் அவரது இந்த அதிரடி வேகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்று தற்போது கத்தி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸைப் போலவே அனிருத்தும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், இதுவரை விஜய் நடித்த படங்களின் ஆடியோ ரைட்ஸை வாங்க பெரிய நிறுவனங்கள் போட்டி போடுவார்கள். ஆனால், இப்போது இந்த படத்துக்கு எதிராக மாணவர் அமைப்புகள் இறங்கியிருப்பதால், எதிர்பார்த்தபடி யாரும் ஆடியோ விசயமாக பேசவில்லையாம். இதுதான் அனிருத்துக்கு இப்போதைக்கு பெரிய வருத்தத்தைக் கொடுத்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி