செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்..? – ரஜினிகாந்த் பேட்டி…!

கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்..? – ரஜினிகாந்த் பேட்டி…!

கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்..? – ரஜினிகாந்த் பேட்டி…! post thumbnail image
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டியும் அறிக்கைகள் வெளியிட்டும் அரசியலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் ரஜினி இது வரை அரசியல் பற்றி முடிவு எடுக்க வில்லை.

1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். இந்த அணி அமோக வெற்றி பெற்றது. பாராளுமன்ற தேர்தலிலும் இதே அணியை ஆதரித்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடுவேன் என அறிவித்தார்.

2008–ல் கோவையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கி பரபரப்பு ஏற்படுத்தினர். கொடி மற்றும் சின்னத்தையும் வெளியிட்டார்கள். இதனை ரஜினி கண்டித்தார். கட்சி துவங்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் அரசியலுக்கு வரும்படி அவருக்கு தொடர்ந்து வற்புறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் லிங்கா படப்பிடிப்புக்காக தற்போது மங்களூர் சென்றுள்ள ரஜினியிடம் நிருபர்கள் அரசியல் பற்றி கேள்வி எழுப்பினார்கள். நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு ரஜினி சிரித்துக் கொண்டே. அது கடவுளின் விருப்பம் கடவுள் விரும்பினால் எது வேண்டுமானாலும் நடக்கும் என பதில் அளித்தார்.

அரசியல் பற்றி உங்களுடைய விருப்பம் என்னவாக இருக்கிறது என்ற கேள்விக்கு ‘‘கடவுள் விருப்பம் தான் என் விருப்பம்’’ என்று பதில் அளித்தார். அரசியலுக்கு வந்தால் முதல் அமைச்சராக முடியும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று, பதில் கூறினார்.

பின்னர் மங்களூரில் இருந்து ஷீமோகாவுக்கு சென்றார். அங்குள்ள தீர்த்த ஹள்ளி ஸ்ரீ ராமேஷ்வரா கோவிலுக்கு சிறப்பு பூஜைசெய்து சாமி கும்பிட்டார். அதன் பிறகு அங்குள்ள ஜோக் அருவி அருகே நடந்த லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி