செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்காவில் கினியா, லைபீரியா, நைஜீரியா, சியாரா லோன் உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.‘எபோலா’வை உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோய்க்கு ஏராளமானவர்கள் செத்து மடிகின்றனர். எபோலா நோய் பாதித்துள்ள நாடுகளில் கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் 56 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை 1069 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நோயால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கபபட்டுள்ளனர். இத்தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மார்கரெட் சான் ஜெனீவாவில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில்,10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினசரி தேவைப்படும் மருந்து, உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.இந்த நோயை உடனடியாக தடுக்கமுடியாது. இதை தடுக்க அசாதாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நோயை கட்டுப்படுத்தவில்லையெனில் விரைவில் மனித குலத்துக்கே பெரும் பிரச்சினையாகும்.

சர்வதேச விமான நிலையம் உள்ளதோ அந்த நகரங்களில் எபோலா நோய் பாதிப்பானவர்கள் வந்து இறங்கும் அபாயம் உள்ளது. எனவே நோய் பாதிப்பு அதிகம் உள்ள கினியா, லைபீரியா, சியாராலோன், நைஜீரியா ஆகிய நாடுகளை சேர்ந்த பொது மக்கள் நாடு விட்டு நாடு செல்வதை தடுக்க எல்லைகள் மூடப்பட வேண்டும்.நோய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு டாக்டர்கள் குழு அனுப்பபட்டு வருகிறது. சிகிச்சை அளிப்பவர்களுக்கும் இந்த நோய் தாக்குவதால் அதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 170 மருத்துவ பணியாளர்கள் எபோலா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்த நோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி