கமல் மகளாக நடிக்கும் நடிகர் விஜய்யின் தங்கை!…

விளம்பரங்கள்

சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ‘ரீமேக்’ ஆகிறது. மோகன்லால் கேரக்டரில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கவுதமி நடிக்கிறார்.இதர நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது.

மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் பெண் போலீஸ் அதிகாரி மகனை ஒரு பெண் அடித்துக் கொள்வதும், பிறகு மகளுடன் சேர்ந்து பிணத்தை தோட்டத்தில் புதைப்பதும், அவள் கணவன், மனைவி, மகள் போலீசில் சிக்கி விடாமல் காப்பாற்ற போராடுவதுமே படத்தின் கதையாகும்.இதில் மகள் கேரக்டர் முக்கியமானது என்பதால் அதற்கு பொருத்தமான நடிகை தேர்வு நடந்தது. தற்போது நிவேதா தாமஸ் இக்கேரக்டருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவேதா தாமஸ் ஏற்கனவே ‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாக நடித்துள்ளார். மலையாளத்தில் இந்த கேரக்டரில் அன்சிபா நடித்து இருந்தார்.பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படத்தில் நடித்த ஆஷா சரத்தே தேர்வாகியுள்ளார். வில்லன் வேடத்தில் கலாபவன்மணி வருகிறார்.மலையாளத்தில் இப்படத்தை டைரக்டு செய்த ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: