செய்திகள்,திரையுலகம் 3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…

3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…

3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!… post thumbnail image
சென்னை:-சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர்.

அதனால் 3 நேரம் வரை எடுக்கப்பட்டுள்ள அஞ்சான் படத்தை கடைசி நேரத்தில் தேவையில்லாத காட்சிகளை கத்தரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று அப்படியே ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். காரணம், ஏற்கனவே சூர்யா நடித்த சிங்கம் படத்தைப்போன்று இப்படமும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருப்பதால், கதை படு ஸ்பீடாக நகர்த்தப்பட்டுள்ளதாம். அதனால், கதையோடு நகரும் ரசிகர்களுக்கு படத்தின் நீளமே தெரியாத அளவுக்கு கதையோட்டம் இருக்கும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி