செய்திகள்,தொழில்நுட்பம் விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…

விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…

விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!… post thumbnail image
மும்பை:-ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் விமானம் ஓட்டும்போது விமானி தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரம் அவருக்கான ஓய்வு எடுக்கும் நேரம் என்றும் கூறப்படுகிறது. அப்போது பெண் துணை விமானியும் தூங்கிவிட்டாரா என்று அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஆனால் பெண் விமானியோ நான் சம்பவம் நடந்தபோது டேப் லெட்டில் பிசியாக இருந்தேன் என்று பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார். விமானம் உயரத்தில் இருந்து கிழே இறங்கியதை கவனிக்கவில்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் கிழே இறங்கியது தொடர்பாக அங்காரா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அழைப்பு விடுத்ததை அடுத்து விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜெட் ஏர்வேயும் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்காக இரண்டு விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி