செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!…

பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!…

பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!… post thumbnail image
பெங்களூர்:-ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. கடை, கடையாக ஏறி இறங்க மக்களுக்கு நேரமும், பொறுமையும் இல்லாதது தான் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.

மக்கள் வீட்டில் இருந்து கொண்டு ஹாயாக பிளிப்கார்ட் மூலம் பொருட்களை வாங்கி குவிப்பதால் அந்நிறுவனத்தின் மதிப்பும், லாபமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 7 ஆயிரம் முழுநேர ஊழியர்களில் நான்கில் ஒரு பங்கு ஊழியர்களுக்கு அந்நிறுவன பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட் பங்குகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பிளிப்கார்ட் பங்குகள் வைத்துள்ள ஊழியர்கள் 400 பேர் கோடீஸ்வரர்களாகி உள்ளனர். அந்நிறுவனத்தில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் இவர்கள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி