செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பத்மபூஷன் விருது பெறும் 10வது கிரிக்கெட் வீரர் டோனி!…

பத்மபூஷன் விருது பெறும் 10வது கிரிக்கெட் வீரர் டோனி!…

பத்மபூஷன் விருது பெறும் 10வது கிரிக்கெட் வீரர் டோனி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.இரண்டு உலக கோப்பையை பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் டோனி. அவரது பெயரை நாட்டின் 3–வது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

பதம்பூஷன் விருதை பெறும் 10–வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை டோனி பெறுகிறார். இதற்கு முன்பு கபில்தேவ், கவாஸ்கர், ராகுல் டிராவிட் போன்ற முன்னணி வீரர்கள் உள்பட 9 பேர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி