செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!…

தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!…

தீபாவளியில் மோதும் கத்தி, ஐ ,பூஜை!… post thumbnail image
சென்னை:-தீபாவளி என்றதும் ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி‘ படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஹரி இயக்கும் படம் ‘பூஜை’. விஷால் ஹீரோ. அவருடன் முதன்முறையாக இணைகிறார் ஸ்ருதி ஹாசன். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ’ படம் பெரும்பகுதி பணிகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே தீபாவளி தினத்தில் இப்படமும் வெளிவர வாய்ப்பிருப்பதாக இதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் தரப்பில் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி