செய்திகள் ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!…

ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!…

ஜப்பான் இளைஞர்களை கவர்ந்த செயற்கை மனைவி!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானில் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வரும் நிறுவனம் ஒன்று அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த பொம்மைகளின் சிறப்பு அதனுடைய தோல் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது. உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல்பகுதிகளும் இருப்பதால் இதை பார்ப்பவர்கள் பெண் என்றே நம்பத் தொடங்கிவிடுவார்கள்.

1000 அமெரிக்க டாலர் விலையில் விற்கப்பட்டு வரும் இந்த பெண் பொம்மை பல்வேறு டிசைன்களில் உயரங்களில் வடிவங்களில் கிடைக்கின்றது. இந்த பொம்மையை அது மாதிரியான உறவிற்கும் பயன்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைத்து வருகின்றது.

ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச்செல்வதாகவும் கூடிய விரைவில் இந்த பொம்மைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் இனிமேல் உங்கள் உறவிற்கு மனைவியையோ அல்லது வேறு பெண்களையோ நாட வேண்டியதில்லை. இந்த பொம்மைகள் போதும் என அந்த நிறுவனம் ஜப்பானிய மீடியாக்களில் விளம்பரமும் செய்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி