பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் கெளதமி!…

விளம்பரங்கள்

சென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த படம் திருஷ்யம். கேளாவில் மெகா ஹிட்டான இப்படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. மோகன்லால் நடித்த வேடத்தில் கமல் நடிக்கிறார். அதேசமயம், மலையாள படங்களின் கதை தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகாது என்பதால், தமிழுக்காக கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர்.

திருநெல்வேலியில் நடக்கும் கதையாக மாற்றியிருக்கும் கமல், முதன்முறையாக திருநெல்வேலி தமிழ் பேசியும் நடிக்கிறார். தற்போது உத்தமவில்லன் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் நெல்லை தமிழ் பேசும் பயிற்சியிலும் இறங்கி விட்டார்.மேலும், மலையாள த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் என்பவரே தமிழிலும் பாபநாசம் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி, மீனா, சிம்ரன், கெளதமி என பலரது பெயர் அடிபட்டு வந்த நிலையில, இப்போது கெளதமியே கமலின் மனைவியாக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: