செய்திகள்,திரையுலகம் ‘வீரம்’ பட இயக்குநரை வாழ்த்தும் அஜித் ரசிகர்கள்!…

‘வீரம்’ பட இயக்குநரை வாழ்த்தும் அஜித் ரசிகர்கள்!…

‘வீரம்’ பட இயக்குநரை வாழ்த்தும் அஜித் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து இயக்கிய ‘வீரம்‘ படம் சூப்பர்ஹிட்படமாக மட்டுமல்ல சிறந்த கமர்ஷியல் படமாகவும் அமைந்ததால் சிவா இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். இந்த செய்தி அஜித் ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தியது. தங்களது சந்தோஷத்தை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

நேற்று இயக்குநர் சிவாவின் பிறந்தநாள். பிறந்த நாள் காணும் இயக்குநர் சிவாவை ட்விட்டர், மற்றும் பேஸ்புக்கில் வாழ்த்துக்களால் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். சிவாவும் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நன்றி தல ரசிகர்களே’ என பதில் அளித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி