செய்திகள்,திரையுலகம் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் நீளம்!…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் நீளம்!…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் நீளம்!… post thumbnail image
சென்னை:-சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது.

படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் நீளம் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். அஞ்சான் படம் மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் வகையில் தயாராகிவுள்ளதாம். தற்போதெல்லாம் படத்தின் நீளம் அதிகம் இருப்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை. அதனால், படத்தின் நீளத்தை சராசரியாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் நீளம் 170 நிமிடங்கள்தான். ஆனால் இந்தப் படத்தையே நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தார்கள். அந்த வரிசையில் அஞ்சான் படமும் இணைந்திருப்பதால் படத்தின் நீளத்தை தற்போதே குறைப்பார்களா, அல்லது ரிலீஸானப் பிறகு வரும் ரிப்போர்ட்டை வைத்து குறைப்பார்களா என்பது தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி