செய்திகள் சீனாவில் ஒரே பிரசவத்தில் 3 குட்டி ஈன்ற பாண்டா!…

சீனாவில் ஒரே பிரசவத்தில் 3 குட்டி ஈன்ற பாண்டா!…

சீனாவில் ஒரே பிரசவத்தில் 3 குட்டி ஈன்ற பாண்டா!… post thumbnail image
ஹாங்காங்:-சீனாவில் குவாங்ஜுவோ பிராந்தியத்தில் சிமியாங் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.இங்கு பான்டா கரடிகள் போன்ற அரிய வகை விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு 12 வயதான ஜுக்சியா என்ற பெண் பான்டா கரடியும், 17 வயதான லின்லின் என்ற ஆண் பான்டா கரடியும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் இவை இரண்டும் ஒன்றிணைந்தன. அதன்பிறகு பெண் பான்டா கரடியான ஜுக்சியா கர்ப்பம் தரித்தது. அதிகாரிகள் ஜுக்சியாவை கவனமுடன் பாதுகாத்து பரிசோதித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி ஜுக்சியா ஒரே பிரசவத்தில் 3 பான்டா கரடி குட்டிகளை ஈன்றது. முதல் 2 குட்டிகளை எளிதாக ஈன்ற ஜுக்சியா, 3வது குட்டியை ஈனும் போது பெரிதும் சோர்வடைந்தது.

இதைத் தொடர்ந்து, வனவிலங்கு மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்தனர். அத்துடன், அந்த 3 பான்டா கரடி குட்டிகளையும் இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். அவை ஒவ்வொன்றும் 83 முதல் 124 கிராம் எடை கொண்டவையாக உள்ளன.தற்போது அந்த 3 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் தவழ்ந்து வருகின்றன. அவை 6 மாதங்கள் வரை கண்காணிக்கப்படும். ஒரே பிரசவத்தில் 3 பான்டா கரடி குட்டிகள் பிறந்திருப்பது அதிசயமாக கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி