செய்திகள் காதில்லாமல் பிறந்த சிறுவனுக்கு காது கேட்க வைத்து சாதனை!…

காதில்லாமல் பிறந்த சிறுவனுக்கு காது கேட்க வைத்து சாதனை!…

காதில்லாமல் பிறந்த சிறுவனுக்கு காது கேட்க வைத்து சாதனை!… post thumbnail image
லண்டன்:-பிரிட்டனில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷயரை சேர்ந்தவர் டேவிட் சொர்கின். அவரது ஒன்பது வயது மகனான கீரண் பிறக்கும் போது, காது இருக்கும் பகுதியில் சிறிய துவாரம் மட்டுமே காணப்பட்டது. பிறக்கும்போதே காதில்லாமல் பிறந்த அவன் பள்ளிக்கு செல்லும்போதுதான் பிரச்சினை அதிகமானது. பல குழந்தைகள் காதுகள் கேட்கும் நிலையில் கல்வி கற்று வந்த நிலையில், இவன் மட்டும் காது கேளாமல் தனித்து நின்றது டேவிட்டுக்கு வேதனையை தந்தது.

அங்குள்ள கிரேட் ஆர்மாண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் தனது மகனை அழைத்துக்கொண்டு போய் காண்பித்தார்.அவனை பரிவுடன் கவனித்த மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை மூலம் அவனுக்கு காதை பொருத்துவதுடன், காது கேட்க வைக்கவும் முடிவெடுத்தனர். அவனது விலாவில் உள்ள குறுத்தெலும்பை எடுத்து அதை காதாக வடிவமைத்து அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். பின்னர் காது கேட்கும் இயந்திரத்தை பொருத்திய மருத்துவர்கள் அவனுக்கு காது கேட்க வைத்தனர். கருவி இல்லாமல் 90 சதவிகிதம் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டாலும் அதை பொருத்தியவுடன் அவனுக்கு காற்று வீசுவதும், பறவைகளின் க்ரீச்சொலியும் நன்றாக கேட்டதாக அவனது தந்தை டேவிட் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய கீரண் தனக்கு பெரிய காதுகள் வேண்டும் என்று விரும்புவதாகவும், இறுதியாக தனக்கு அவை கிடைக்கப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தான். அறுவை சிகிச்சைக்குப்பின் பேசிய கீரணிண் தந்தை டேவிட் மற்றும் தாய் லூயிஸ் ஆகியோர், தாங்கள் எதிர்பார்த்ததை விட கீரணுக்கு நன்றாக காது கேட்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி