செய்திகள்,திரையுலகம் ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!…

ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!…

ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!… post thumbnail image
சென்னை:-2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை. சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்தார் தனுஷ்.

ஜூலை 18ம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி தனுஷுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததன் காரணமாக, படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 15 கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.

தற்போதைய சூழலில் மூன்றாவது வாரத்திற்கு மேல் எந்த ஒரு படமும் தாக்குப்பிடிப்பதில்லை என்ற சூழலில் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது விஐபி. தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு. தனுஷ் நடித்த படங்களிலேயே வெளிநாட்டில் முதல் முறையாக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது விஐபி படத்துக்குத்தான். 25 நாட்களில் உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது விஐபி. தனுஷ் படங்களிலேயே அதிக அளவில் வசூல் செய்திருக்கும் படம் என்ற பெருமை வேலையில்லா பட்டதாரி படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி