செய்திகள்,முதன்மை செய்திகள் இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு…

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு…

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிப்பு… post thumbnail image
வாஷிங்டன்:-கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிற 40 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. இது கணித நோபல் பரிசாக கருதப்படுகிறது. இந்த விருது, பெரும்பாலும் வெள்ளையர்களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆண்டு 4 பேருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மஞ்சுள் பார்கவா, மரியம் மிர்ஜாகனி, ஆர்தர் அவிலா, மார்ட்டின் ஹேரர் ஆவார்கள்.

இவர்களில் மஞ்சுள் பார்கவா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா அமெரிக்கர். மரியம் மிர்ஜாகனி ஈரானைச் சேர்ந்த பெண்மணி. ஆர்தர் அவிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்ட்டின் ஹேரர் ஆஸ்திரியாக்காரர்.பீல்ட்ஸ் மெடல், 1936-ம் ஆண்டு சர்வதேச கணித சங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கனடா டாலர் ரொக்கப்பரிசும், பதக்கமும் கொண்டது இந்த விருது.

40 வயதான மஞ்சுள் பார்கவா, 1974-ம் ஆண்டு, ஆகஸ்டு 8-ந் தேதி கனடாவில் ஹேமில்டனில் பிறந்தவர். நியூயார்க்கில் வளர்ந்தவர். 14 வயதிலே பள்ளிக்கல்வி, கம்ப்யூட்டர் கல்வி முடித்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.தற்போது அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி