செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அஜித் படத் தயாரிப்பாளருடன் கைக்கோர்க்கும் விஜய் பட இயக்குனர்…!

அஜித் படத் தயாரிப்பாளருடன் கைக்கோர்க்கும் விஜய் பட இயக்குனர்…!

அஜித் படத் தயாரிப்பாளருடன் கைக்கோர்க்கும் விஜய் பட இயக்குனர்…! post thumbnail image
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். நேசன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அதிக வசூலையும் வாரிக் குவித்தது.

இந்த உற்சாகத்துடன் நேசன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதையில் ஆர்யா, ஜெயம் ரவி, விஷால் ஆகியோரில் யாரையாவது ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார். அஜீத்தின் வெற்றிப் படமான ‘வீரம்’ படத்தை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. வெற்றிப்பட இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி