ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…

விளம்பரங்கள்

துபாய்:-டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில், ஆல்ரவுண்டர் களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், பேட்டிங்கில் அசத்தியதே முன்னேற்றத்துக்கு காரணம்.

இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் (365 புள்ளி) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளார். இப்பட்டியலில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சனை முந்தி, 4வது இடம் பிடித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: