செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!…

எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!…

எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!… post thumbnail image
லைபீரியா:-‘எபோலா’ வைரஸ் நோய், பாதித்த நாடுகளில் லைபீரியாவும் ஒன்று. இங்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மாப்பயோ பாமாசூடிகல்ஸ் நிறுவனம் இந்த நோயை குணப்படுத்துக் கூடிய மருந்து தயாரித்துள்ளது.

அதற்கு ‘ஷ்மாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த 2 சமூகநல ஆர்வலர்கள் ‘எபோலா’ நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரும் பாதிக்கப்பட்டு மாட்ரிட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர்களுக்கு ‘ஷ்மாப்’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ‘எபோலா’ நோய் குணமாகி வருகிறது. எனவே, இந்த மருந்தை தங்களுக்கு வழங்கும்படி அமெரிக்காவிடம் லைபீரியா அரசு கேட்டுள்ளது. பரிசோதனைக்குரிய அந்த மருந்து அடுத்த வாரம் லைபீரியாவுக்கு அனுப்பப்பட உள்ளது.இந்த தகவலை லைபீரியா அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி