ரஜினியின் படத்தை வெளியிட தடை!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா பட ஷூட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது அவரை சந்திக்க பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஷூட்டிங்கிற்கு வந்தார். இவர், சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். மேக் அப் அணிந்துக்கொண்டிருந்த ரஜினியிடம் இயக்குனர் வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக ரஜினியே ரோஹித் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். தன்னை நோக்கி ரஜினி வருவதை கண்டதும் ஒரு நிமிடம் ஷாக் ஆனார் இயக்குனர். வந்த வேகத்தில் ரோஹித்தை வரவேற்ற ரஜினி நலம் விசாரித்ததுடன், உங்களுடைய பணி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்கள் ரசிகன் என்றார்.பின்னர் இதுபற்றி ரோஹித் கூறும்போது, உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் ரஜினி எந்தவித பந்தாவும் இல்லாமல் என்னைவந்து சந்தித்து நலம் விசாரித்து பாராட்டியபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

அவர் முன்னால் நான் ஒன்றுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர் மரியாதையுடன் நடத்தினார் என்றார். பின்னர் ரஜினியுடன் நின்று ரோஹித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அருகில் இருந்த டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், எவ்வளவு புகைப்படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை தயவுசெய்து ஆன் லைனில் வெளியிட்டு விடாதீர்கள். அப்படி வெளியிட்டால் லிங்காவில் ரஜினி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ் வெளிப்பட்டுவிடும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: