கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!…

விளம்பரங்கள்

சென்னை:-கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், ஜெயராம் நடிக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. படத்தை நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

பெங்களூர் மற்றும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 18ம் நூற்றாண்டு நகரம் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்புகள் நடந்தது. பின்னர் சென்னையில் நடந்தது.கடந்த சில நாட்களாக எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் பழங்கால செட் போடப்பட்டு அதில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ஆகஸ்ட் 8 ம் தேதி இரவுடன் படப்பிடிப்புகள் முடிந்தது. கமல், படத்தில் பணியாற்றியவர்களுக்கு கைகுலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றார்

தற்போது படத்தின் டப்பிங் பணிகளும், பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் நடைபெற உள்ளது. இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியதாவது: இப்போது என்னால் எதையும் விரிவாக சொல்ல முடியாது. கடந்த 5 மாதமாக நடந்த படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்து டப்பிங் பணிகள் தொடங்குகிறது. இது என் சினிமா கேரியரில் மிகப்பெரிய படம். எனக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ரமேஷ் அரவிந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: