இங்கிலாந்தில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கவாஸ்கர்!…

விளம்பரங்கள்

மான்செஸ்டர்:-இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையே இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவர் டெலிவிசன் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்..

4–வது டெஸ்ட் முடிந்த பிறகு கவாஸ்கர் மான்செஸ்டரில் காரில் சென்றார். பின்பக்க இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். கவாஸ்கர் அருகே அவரது லண்டன் நண்பர் சந்திரேஷ் பட்டேலும், டிரைவரின் அருகே முன் பக்கத்தில் மற்றொரு வர்ணனையாளர் மார்க் நிகோலசும் இருந்தனர்.

திடீரென கவாஸ்கர் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. எதிரே வந்த கார் மீது மோதுவதை கவாஸ்கரின் கார் டிரைவர் தவிர்க்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு கார் மீது மோதியது. கடுமையான மழையால் இந்த விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கவாஸ்கர் உயிர் தப்பினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: