செய்திகள்,திரையுலகம் பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!…

பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!…

பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!… post thumbnail image
மும்பை:-‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் தனுஷ். அதன் பின் தமிழ் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் தனுஷுக்குக் கிடைத்தது. உலகமே வியந்து பார்க்கும் ஹிந்தி நடிகரான அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு தனுஷை பெருமைப்பட வைத்து விட்டது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராவும் நடிகையாக திரையுலகுக்கு அறிமுகமாகிறார். ‘சீனிகம், பா’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய பால்கி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஷமிதாப்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தித் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படம் தயாராகும் போதே அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது வழக்கம். சொன்னபடி படத்தை வெளியிடவும் செய்வார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி