செய்திகள்,திரையுலகம் நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!…

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!…

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!… post thumbnail image
சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் சில வருடங்களுக்கு முன்பு அவர் ஸ்படிகம் என்ற படத்தின் படப்பிடிப்பில் யானை மேலிருந்து இருந்து கீழே குதிப்பது போன்று டூப் போடாமல் நடித்தார். அப்போது அவரது காலில் பலத்த அடிபட்டு அதற்கான சிகிக்சை எடுத்துக் கொண்டார். அன்று முதல் அவருக்கு கால் மற்றும் கழுத்துவலி அடிக்கடி ஏற்பட்டது. மாத்திரை எடுத்துக் கொண்டு சமாளித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வலி ஏற்பட்டதால் எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வலியை நிரந்தரமாக குணமாக்க காலில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆபரேஷன் செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டியது இருக்கும்.

இதனால் தான் நடித்து வரும் படங்கள் பாதிக்கப்படும் என்று மோகன்லால் கருதுகிறார். இப்போதைக்கு வலியை மட்டும் நிறுத்தி விட்டு படங்களை முடித்து கொடுத்த பிறகு ஆபரேஷன் செய்து கொள்ளலாமா என்றும் அவர் யோசிக்கிறார். ஆனால் டாக்டர்கள் கட்டாயம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்களாம்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மோகன்லாலை மாதா அமிர்தானந்தமயி சந்தித்து நலம் விசாரித்தார். மோகன்லால் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி