கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…

விளம்பரங்கள்

லண்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 95 ரன்னில் வெற்றி பெற்று வரலாற்று முத்திரை பதித்தது. ஆனால் சவுத்தம்டனில் நடந்த 3–வது டெஸ்டில் 266 ரன்னிலும், மான்செஸ்டரில் நடந்த 4–வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்னிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

டோனி தலைமையில் வெளிநாட்டில் இந்திய அணி சந்தித்த 13–வது தோல்வியாகும். இது ஒரு மோசமான சாதனையாகும். வெளிநாட்டில் 27 டெஸ்டில் விளையாடி 6–ல் வெற்றியை பெற்று கொடுத்தார். 13 டெஸ்டில் தோற்றது. 8 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.மற்ற இந்திய கேப்டன்களில் கங்குலி, அசாருதீன், பட்டோடி தலா 10 டெஸ்டில் வெளிநாட்டில் தோற்று இருந்தனர்.வெளிநாட்டு மண்ணில் இன்னும் 3 டெஸ்டில் தோற்றால் உலகின் மோசமான கேப்டன் என்ற நிலைக்கு தள்ளப்படுவார். ஸ்டீபன் பிளமிங்கும், பிரைன் லாராவும் வெளிநாட்டில் தலா 16 தோல்வியை தழுவி இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: