அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…

விளம்பரங்கள்

ஜம்மு:-ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து யாத்திரீகர்கள் அங்கு பயணம் மேற்கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது.

கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து வரும் நிலையில் ஆபத்தான மலைப்பாதை வழியாக யாத்ரீகர்கள் பயணித்தனர். தரைமட்டத்திலிருந்து 3880 மீட்டர் உயரத்திலுள்ள குகைக்கோயில் பனிலிங்கத்தை இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் யாத்ரீகர்கள் தரிசித்துள்ளனர்.இந்த வருடத்திற்கான யாத்திரையின் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 46 யாத்ரீகர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: