செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!… post thumbnail image
மும்பை:-பிரபல இந்தி நடிகை கஜோல். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். தற்போது ஒரு மகனுக்கும், மகளுக்கும் தாயாக இருக்கிறார். 2010ம் ஆண்டு நடித்த மை நேம் இஸ் கான்தான் கஜோல் ஹீரோயினாக நடித்த கடைசி படம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கஜோல். பிரபல விளம்பர பட இயக்குனர் ராம் மத்வானி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் கஜோலை வைத்து நிறைய விளம்பர படங்களை இயக்கியவர். கஹானி, இங்கிலீஸ் விங்கிலீஸ், குயின், மர்தாணி பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். இதற்கிடையில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் கஜோல் நடிக்க பேச்சு நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி