செய்திகள்,திரையுலகம் நடிகர் ஆமீர்கானின் நிர்வாண படத்துக்கு எதிராக வழக்கு!…

நடிகர் ஆமீர்கானின் நிர்வாண படத்துக்கு எதிராக வழக்கு!…

நடிகர் ஆமீர்கானின் நிர்வாண படத்துக்கு எதிராக வழக்கு!… post thumbnail image
மும்பை:-பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகே. இதனை ராஜ்குமார் ஹிராணி இயக்குகிறார். அனுஷ்கா சர்மா, சஞ்சய்தத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஆமீர்கான் முழு நிர்வாணமாக ஒரு ரேடியோவை வைத்துக் கொண்டு நிற்பது மாதிரியான படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதை எதிர்த்து கான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் பாக்ஸி என்பவர் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆமீர்கானின் நிர்வாண போசால் நாட்டில் நிர்வாணம் பற்றி தவறான புரிதல் உண்டாகும், இந்த போஸ்டர்களால் பெண்கள் முகம் சுழிக்கிறார்கள். இது தவறான முன்னுதாரணம், நம் கலாச்சாரத்துக்கு எதிரானது.

எனவே இதற்கு தடைசெய்ய வேண்டும். வெளியிட்டவர்கள் மற்றும் போஸ் கொடுத்த ஆமீர்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி திலீப் குப்தா, அமீர்கான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி