செய்திகள்,திரையுலகம் கேமராமேனை திரும்பத் திரும்ப கட்டிப்பிடித்து இயக்குனரை வெறுப்பேற்றிய நடிகை!…

கேமராமேனை திரும்பத் திரும்ப கட்டிப்பிடித்து இயக்குனரை வெறுப்பேற்றிய நடிகை!…

கேமராமேனை திரும்பத் திரும்ப கட்டிப்பிடித்து இயக்குனரை வெறுப்பேற்றிய நடிகை!… post thumbnail image
சென்னை:-விக்ரம்பிரபு நடித்துள்ள சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜர். சிகரம் தொடு படத்தில் நடிப்பதற்கு அவருக்கு சிபாரிசு செய்தவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான விஜய் உலகநாத்தாம். அதையடுத்து, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட மோனல், டைரக்டர் கெளரவை சந்திக்க வந்தபோது, அவருக்கு எதிரே கேமராமேன் விஜய் உலகநாத் இருப்பதைப் பார்த்ததும் டைரக்டருக்கு கைகுலுக்க வந்தவர், அதை நிறுத்தி விட்டு, விஜய் உலகநாத்தை மாறி மாறி கட்டிப்பிடித்தாராம்.

அதையடுத்து படப்பிடிப்பு நடந்தபோது, மோனல் கஜ்ஜர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது, மற்றவர்கள் சம்பந்தப்பட்ட சீனில் லைட்டிங்கை லைட்டாக பண்ணிய கேமராமேன், மோனல் நடித்த காட்சியில் ப்ரைட்டாக லைட்டிங் கொடுத்து அவரையும் ப்ரைட்டாக காண்பித்தாராம். அப்படி தன்னை ஒவ்வொரு காட்சியிலும் அவர் அழகாக காண்பிக்கும்போதும் அவரை கட்டிப்பிடித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு வந்தாராம் மோனல்.

இதை சிகரம்தொடு படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்த டைரக்டர் கெளரவ், படம் தொடங்கியதில் இருந்தே கேமராமேன் விஜய் உலகநாத்தும், மோனல் கஜ்ஜரும் அடித்த லூட்டி என்னை மட்டுமிலலாமல் எல்லோரையுமே வெறுப்பேற்றி விட்டது. அந்த வகையில் டைரக்டரை மோனல் கண்டுகொள்ளவேயில்லை என்று ரொம்பவே பீல் பண்ணினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி