செய்திகள்,விளையாட்டு இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!…

இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!…

இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!… post thumbnail image
மான்செஸ்டர்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இயான் பெல் (45), கிறிஸ் ஜோர்டான் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் இயான் பெல், டெஸ்ட் அரங்கில் தனது 42வது அரைசதத்தை பதிவு செய்தார். ‘நைட் வாட்ச்மேனாக’ களமிறங்கிய கிறிஸ் ஜோர்டான், பங்கஜ் சிங் வீசிய 39வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 23 ரன்கள் சேர்த்த போது ஜோர்டான் (13) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய பெல் (58), புவனேஷ்வர் ‘வேகத்தில்’ வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி (13), வருண் ஆரோன் பந்தில் போல்டானார்.பின் இணைந்த ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டு, முன்னிலை பெற்றுத் தந்தனர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து, 85 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மைதானத்தில் தேங்கி இருந்த தண்ணீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக, போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஜோ ரூட் (48), ஜாஸ் பட்லர் (22) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வருண் ஆரோன், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி