செய்திகள் பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…

பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…

பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!… post thumbnail image
திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஆறு ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன.இதற்கிடையே ரகசிய அறைகளில் உள்ள பொருட்களின் விவரப்பட்டியலை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு சார்பில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.

அதன்படி ‘ஏ’ என்ற ரகசிய அறையில் இந்த பொற்குவியல்கள் ‘சி’ அறைக்கு மாற்றி வைக்கப்பட்டு, மதிப்பீட்டு பணிகள் நடந்தது. அதன்பின்னர் ரகசிய ‘ஏ’ அறையில் பலத்த பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.இந்நிலையில் ‘ஏ’ என்ற ரகசிய அறையில் கிடைத்த தங்கத்தினால் ஆன மணிகள், சாமி சிலைகள், குடங்கள், கயிறு மற்றும் வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்ட பொற்குவியல்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன் உள்ள விலை உயர்ந்த நவரத்தின கற்கள், வைரம், வைடூரியம் போன்ற கற்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடங்கள் மற்றும் தங்க முத்துமாலைகள் போன்றவை மதிப்பீடு செய்ய முடியாமல் உள்ளன.

இவை அனைத்தும் சிறந்த முறையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்புடன் ‘ஏ’ ரகசிய அறையில் மீண்டும் வைக்கப்பட்டன.இந்த பொற்குவியல் வைக்கப்பட்டுள்ள ‘ஏ’ ரகசிய அறை சர்வதேச அடிப்படையில் பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டு உள்ளது.விலை உயர்ந்த தங்க, வைடூரிய நகைகள் பட்டுத்துணியில் பொதியப்பட்டு பாதுகாப்பான பெட்டியில் அடைக்கப்பட்டு ரகசிய ‘ஏ’ அறையில் வைக்கப்பட்டது. எவ்வளவு காலம் இருந்தாலும் எந்தவித பாதிப்பும் இதற்கு ஏற்படாது என்று கூறப்படுகிறது. கோவில் நிர்வாக அதிகாரி கே.என்.சதீஷ் மேற்பார்வையில் இந்தப்பணிகள் நடந்தன.பழைய கால தங்க நாணயங்கள் அனைத்தும் தனியாக பெட்டியில் அடைக்கப்பட்டு புதைபொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி