செய்திகள்,திரையுலகம் நடிகர் அதர்வாவை பார்வையிலேயே மிரட்டிய ஏழாம் அறிவு வில்லன்!…

நடிகர் அதர்வாவை பார்வையிலேயே மிரட்டிய ஏழாம் அறிவு வில்லன்!…

நடிகர் அதர்வாவை பார்வையிலேயே மிரட்டிய ஏழாம் அறிவு வில்லன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அதர்வா நடிப்பில் பைக் ரேஸை மையமாகக்கொண்டு இரும்புக்குதிரை என்ற படம் தயாராகியுள்ளது.பாண்டிச்சேரியை களமாகக்கொண்ட இந்த படத்தில் ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பைக் ரேஸ்கள் போட்டியில் கலந்து கொள்வது போன்ற அதிரடியான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். அதோடு, ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த ஜானியே இப்படத்தில் அதர்வாவுடனும் மோதுகிறார்.

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவை எப்படி தனது பார்வையாலே மிரட்டினாரோ அதேபோன்று இந்த படத்திலும் இன்னொரு கோணத்தில் அதர்வாவை மிரட்டியிருக்கிறாராம் அவர். முக்கியமாக அவரது உருட்டல் மிரட்டல்கள் வார்த்தைகளாக இல்லாமல் பார்வையிலேயே படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் அவருக்கு படத்தில் டயலாக் போர்ஷன் மிகக்குறைவாம்.

அதன்காரணமாக, ஜானி நடித்துள்ள பெரும்பாலான காட்சிகளில் அவரது நடை உடை, மிரட்டலான பார்வைக்கு ஜி.வி.பிரகாசும் தனது பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறாராம். முக்கியமாக, அவர் என்ட்ரியாகும் பைட் சீன், பைக் சேஸிங் சீன்களுக்கென்றே டப் ஸ்டப், ஹிப் பாப் பாணியில் இசையமைத்துள்ளாராம். அது ஜானியின் வில்லன் நடிப்புக்கு மேலும் வில்லத்தனம் சேர்த்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி