அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய– மாநில அரசுப் பணிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.பிரதமர் பதவியை ஏற்றதும் இதற்காக அவர் அரசின் பல்வேறு துறை செயலாளர்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்கள் 3 மேஜைகளுக்கு மேல் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்.

திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் மோடி அறிவுறுத்தி இருந்தார். அவரது இந்த எளிமையான நடைமுறைகளால் மத்திய அரசின் பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பும், பணிகளில் வேகமும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி 19 உத்தரவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மோடியின் இந்த 19 உத்தரவுகள் நேற்று முன்தினம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கான அகில இந்திய சேவை (நடத்தை) விதிகள்–1968 சட்டத்திலும் பிரதமர் மோடியின் 19 உத்தரவுகள் திருத்தம் செய்து சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடியின் இந்த 19 உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள அந்த 19 உத்தரவு விபரம் வருமாறு:–

சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகில இந்திய பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்கு நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

முக்கிய முடிவுகள், திட்ட அமலாக்கங்களில் பெருந்தன்மையுடனும், அரசியல் பாரபட்சமின்றியும் நடந்து கொள்ள வேணடும்.

உயர் பதவிகளில் உள்ளவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். நல்ல கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். கடமைகளை செய்வதில் தவறக்கூடாது.

பொதுமக்களால் மிகவும் எளிதில் அணுகப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது அதிகபட்ச பொறுபபுணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

நிர்வாகத்தில் வெளிபபடை தன்மையாக இருங்கள். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள், ஏழை – எளியவர்கள் உங்களைத் தேடி வரும்போது அவர்களிடம் பரிவுடன் பேசுங்கள். கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் கடமையில் இருந்து தவறு செய்யும் வகையில் தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்புகளோ பணம் மற்றும் கோரிக்கைகள் மூலம் உங்களை ஈர்க்க நினைத்தால் அடிபணியாதீர்கள். உங்கள் பதவியை உங்களின் தனிப்பட்ட நலனுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் நலனுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்.

அரசு அதிகாரிகள் செய்யும் தேர்வு மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் தகுதி அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒருபோதும் பாரபட்சத்துக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.

அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மேன்மை படுத்துவதாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும்.

பொதுமக்கள் நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவு தனிப்பட்ட முறையில் உங்களால் மட்டுமே எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும். பொது சொத்துக்களை திறமையாக பயன்படுத்துங்கள்.

அரசு பணத்தை செலவிடுவதில் திறமையான முடிவு எடுங்கள். சிக்கனமாக, சிறப்பாக செலவுகளை செய்யுங்கள். சட்டம், விதிகள், ஒழுங்கு நடத்தை விதிகள் மற்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள நடத்தை கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு காரியத்தை ஒரு போதும் செய்யாதீர்கள். அத்தகைய செயல்களில் இருந்து விலகியே இருங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடியின் 19 உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி