அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!… post thumbnail image
வாஷிங்டன்:-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கி தவிக்கின்றனர்.

சிஞ்சர் மலை பகுதி கடுமையான வெப்பம் மிகுந்தது. எனவே, அங்கு சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் யாஷிடி இனமக்கள் வெப்பம் மற்றும் தாகத்தால் செத்து மடிகின்றனர். இதுவரை 40–க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகிவிட்டனர்.இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே நேற்று இரவு வெள்ளை மாளிகையில் அவசரமாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர்.முடிவில், சிஞ்சர் மலையில் தங்கியிருக்கும் யாஷிடி இன மக்களை காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் தண்ணீரை விமானங்கள் மூலம் வீச அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இத்தகவலை அவர் நள்ளிரவில் டெலிவிஷனில் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, ஈராக்கில் நடப்பதை கண்டு கொள்ளாமல் அமெரிக்கா கண்மூடித்தனமாக இருக்காது. அங்கு மலையில் தங்கியிருக்கும் மைனாரிட்டி மக்களை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றுவது நமது கடமை ஆகும்.எனவே, அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படும் என்றார். இது குறித்து அவர் 9 நிமிடங்கள் மட்டுமே டெலிவிஷனில் பேசினார். அப்போது அமெரிக்கா எதற்காக இந்த முடிவை எடுத்தது என்பது குறித்து விளக்கினார்.மேலும், குர்தீஷ் மாகாணத்தின் தலைநகர் எர்பில் நோக்கி போராளிகள் முன்னேறும் பட்சத்தில் அவர்கள் மீது குண்டு வீசி தாக்கவும் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் ஆலோசனை நடத்தினர்.
ஈராக் போராளிகள் எல்லைத்தாண்டி செல்வதால் அதனை முறியடிக்க ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஒபாமா உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி