செய்திகள் இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!… post thumbnail image
சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வாழும் இந்தியத் தம்பதியரான ரிஷி இஸ்ரானியும், அவரது மனைவி ப்ரநோதியும் தங்களுடைய ஆறு வருட உழைப்பின் பலனாக ரொட்டிமேடிக் என்ற சப்பாத்தி தயாரிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு நிமிடத்தில் ஒரு சப்பாத்தியைத் தயாரிக்கும் திறன் கொண்டது இந்த இயந்திரம்.

தேவையான மாவு, எண்ணெய், சப்பாத்தியின் தடிமன், மிருதுத்தன்மை என்று ஒருவருக்கு வேண்டிய விதத்தில் செயல்படுமாறு இந்த ரோபோவை அமைத்துக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும். அதுபோல் அனைத்துப் பகுதிகளையும் பிரித்து சுத்தம் செய்வதும் எளிதாக உள்ளது என்பது இந்த இயந்திரத்தின் விற்பனை வாய்ப்பை அதிகரித்துள்ளது.

அமெரிக்கப் பண மதிப்பில் 599 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்திற்கான ஆர்டர்களின் மதிப்பு இப்போதே அந்தத் தம்பதியருக்கு 5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களைத் திரட்டித் தந்துள்ளது. ரோபோடிக் தொழில்நுட்பத்தில் சமையலில் உபயோகப்படுத்தப்பட இருக்கும் முதல் இயந்திரம் இதுவென்ற பெருமையுடன் அமெரிக்க சான்றிதழ்களைப் பெற இந்தத் தம்பதியினர் காத்திருக்கின்றனர். அனேகமாக அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவுக்கான இவர்களின் ஏற்றுமதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி