விஜய் அரசியலுக்கு வர வேண்டும் – சீமான்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய்க்கு எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் தான், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதோடு, அவ்வப்போது ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும், ஒரு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கும் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. ஆனபோதும் இன்னும் விஜய் அரசியலில் குதிக்கவில்லை.

இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, விஜய் தமிழர்கள் மீது அதிக பாசம் கொண்டவர். தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். அதனால் எதிர்காலத்தில் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: