மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா வருகை குறித்து கேள்வி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-2012ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மற்றும் நடிகை ரேகா இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அதில் இருந்து அவர்கள் நீண்ட காலமாக அவையில் ஆஜராக வில்லை. இந்நிலையில் அவர்களது வருகை குறித்து மாநிலங்களவையில் சி.பி.ஐ. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் 60 நாட்கள் அவையில் ஆஜராகவில்லை என்றால், அவர்களது பதவியை பறிக்க முடியும் என்று சி.பி.ஐ. உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் வெறும் மூன்று நாட்களே பாராளுமன்றம் வந்துள்ளார் என்றும் நடிகை ரேகா 7 நாட்கள் மட்டுமே பாராளுமன்றம் வந்துள்ளார் என்றும் ஆர். ராஜீவ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அப்போது, மாநிலங்களவை சபாநாயகர் ஹமீது அன்சாரி பதில் அளித்து பேசுகையில், சச்சின் தெண்டுகல் 40 நாட்கள் அவைக்கு வரவில்லை, நடிகை ரேகா அதற்கும் குறைவான நாட்களே அவைக்கு வரவில்லை, எனவே அரசியலமைப்பு மீறல்கள் எதுவும் இதில் இல்லை என்று கூறியுள்ளார். 60 நாட்கள் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க முடியும்.

பாராளுமன்ற உறுப்பினராக உள்ள பிரபலங்களின் வருகைபதிவு குறித்து அவையில் விமர்சிக்கப்பட்டது. இந்த வரிசையில் பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் நடிகை ஹேமா மாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா உள்ளனர். எல்லோரையும் விட கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வருகை மிகவும் மோசமாக உள்ளது. 3 நாட்கள் மட்டும் அவைக்கு வந்த அவர் இந்த ஆண்டு பாராளுமன்றத் தொடர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் பாராளுமன்றத்தில் நடந்த எந்த ஒரு விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. 41 வயதான சச்சின் தெண்டுல்கர் ஜூன் 2012 ல் ஒரு உறுப்பினராக பதவியேற்ற போது விளையாட்டுக்கு ஒரு குரல் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: