செய்திகள்,திரையுலகம் வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்!…

வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்!…

வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி உள்ள வேலையில்லா பட்டதாரி படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு காட்சியில் நடிகர் தனுஷின் பெற்றோர், அவரை திட்டுவது போன்ற காட்சி உள்ளது.அக்காட்சியில் பெற்றோருக்கு பதில் அளித்துப் பேசும் நடிகர் தனுஷ், தம்பியைப் போல நீ என்னை புனித ஜான்ஸ் பள்ளிக்கூடத்திலா சேர்த்தீர்கள். ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில்தானே படிக்க வைத்தீர்கள்.

என்னால் ஆங்கிலம் சரளமாகப் பேச முடியவில்லை. வேலையும் கிடைக்கவில்லை என்பது போன்ற வசனம் இடம் பெற்றுள்ளது.இந்த வசனத்திற்கு தமிழகத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இந்த வசனக் காட்சியை உடனடியாக நீக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்மேலும் இந்த காட்சி நீக்க கோரி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டை இந்து மகா அமைப்பினர் முற்றுகையிட்டனர்

இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் வசன காட்சியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே சேலம் ராமகிருஷ்ணா மினஷன் ஆசிரம செயலாளர் சுவாமியதாத்மானந்தரும் வசனத்தை நீக்கும்படி தனுசுக்கு கடிதம் எழுதினார்.இதையடுத்து ராம கிருஷ்ண மிஷன் பள்ளி பற்றி சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.வசனம் நீக்கம் இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை. இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி