செய்திகள்,திரையுலகம் விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்!…

விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்!…

விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்!… post thumbnail image
சென்னை:-பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் வெற்றிகளுக்கு பிறகு விஷால் நடிக்கும் படம் பூஜை. சிங்கம், சிங்கம் 2 வெற்றிக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றிக்கு ஹரி எதிர்பார்த்திருக்கும் படம்.ஸ்ருதிஹாசன், ராதிகா, முகேஷ் திவாரி, ஜெயபிரகாஷ், பிரதாப், சூரி, அபிநயா, கவுசல்யா, சித்தாரா, ரேணுகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஆண்ட்ரியா ஒரு பாட்டுக்கு ஆடி உள்ளார்.

தற்போது இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் பீகார் மாநிலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக விஷால், ஹரி உள்ளிட்ட படக்குழுவினர் பீகாரில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அடுத்து சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முடிய இருக்கிறது. அதற்குள் வேந்தர் மூவீஸ் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியிடமிருந்து வாங்கி விட்டது. விஷால் படங்களிலேயே இதுதான் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் என்கிறார்கள்.

தயாரிப்பு செலவில் இருந்து கூடுதலாக 30 சதவிகிதம் லாபம் விஷாலுக்கு கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். அதிகாரபூர்வமான தொகையை அறிவிக்கவில்லை.படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறது. சீ தமிழ் தொலைக்காட்சியும், விஜய் தொலைக்காட்சியும் மோதுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி