செய்திகள்,திரையுலகம் சென்னையில் கொரிய திரைப்பட விழா!…

சென்னையில் கொரிய திரைப்பட விழா!…

சென்னையில் கொரிய திரைப்பட விழா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பெரும் அளவில் கைகொடுப்பது கொரியன் படங்கள்தான். நமது பண்பாட்டு உறவுமுறைகளும், கொரியன் பண்பாட்டு உறவு முறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். நம்மைப் போன்ற குடும்ப உறவுகளை பாதுகாக்கிறவர்கள் அவர்கள். அதனால்தான் கொரியன் படங்களை நம் இயக்குனர்கள் எளிதாக காப்பி அடித்து விடுகிறார்கள்.

சென்னையில் வருகிற 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை 6 நாட்கள் கொரிய திரைப்பட விழா நடக்கிறது. இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும் டில்லியில் உள்ள கொரிய கலாச்சார மையமும் இணைந்து இதனை நடத்துகிறது. ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவை கொரிய தூதர் க்யூங்சூ தொடங்கி வைக்கிறார். தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ராஜராம், நடிகை கோமல் சர்மா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.இதில் புகழ்பெற்ற கொரிய திரைப்படங்களான ஆர்கிடெக்டர், வார் ஆப்தி ஆரோஸ், பீட்டா, ஜூசஸ் ஹாஸ்பிடல், மீட் த இன் லாஸ், சன்னி ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி