செய்திகள்,திரையுலகம் சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!…

சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!…

சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் பிரபுசாலமன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மைனா எடுத்தார். கும்கி யானையை மையமாக வைத்து கும்கி படத்தை எடுத்தார். தற்போது சுனாமியை மையமாக வைத்து கயல் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து சிங்கத்தை மையமாக வைத்து படம் இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

தற்போது சிங்கம் படத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கி விட்டார். சிங்கம் படத்தின் ஒன் லைனை சொல்லி, தற்போது கயல் படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்து வரும் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.காட்டுக்குள் சுற்றுலா செல்லும் ஒரு குடும்பத்தினரை சிங்கம் ஒன்று துரத்துகிறது. சிதறி ஓடி குடும்பம் தப்பிக்கிறது. 5வயது குழந்தை மட்டும் சிங்கத்திடம் மாட்டிக் கொள்கிறது. சிங்கத்திற்கு பசி எடுக்காவிட்டால் அது எந்த விலங்கையும் வேட்டையாடாது. முயல் மாதிரி சிறு விலங்குகளுடன் விளையாடவும் செய்யும்.அப்படி ஒரு சிறு விலங்காக நினைத்து பசியில்லாமல் இருக்கும் சிங்கம் அந்த குழந்தையுடன் விளையாட ஆரம்பிக்கிறது.

அதற்கு பசி நெருங்க நெருங்க அந்த குழந்தை அதனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறது, குழந்தைக்கும், சிங்கத்துக்குமான பாசப்போராட்டம் தான் கதை. என்பது பிரபுசாலமன் அலுவலக வட்டார தகவல்கள். இதில் சிங்கம் மட்டும் அனிமேஷன் உருவமாக இருக்கும். அதை உருவாக்கும் பொறுப்பைத்தான் கயல் கிராபிக்ஸ் பண்ணும் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அது சிறப்பாக வந்தால் கயல் படத்திற்கு பிறகு சிங்கம் படம்தான்.இதுபற்றி பிரபுசாலமான் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்காக ஒரு படம் உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. லைப் ஆஃப் பை ஸ்டைலில் ஒரு படம் பண்ண ஆசை. 3டியில் குழந்தைகளுக்கான படமாக அது இருக்க வேண்டும். குழந்தைகள், பெற்றவர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் வகையில் இருக்க வேண்டும். படத்துக்கான மாடல் பணிகளை கிராபிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறேன். சரியாக அமைந்தால் தொடங்கி விடுவேன். என்கிறார் பிரபுசாலமன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி