விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய்முருகதாஸ் இணைந்துள்ள கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அந்த படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் ஒருவர் தயாரித்திருப்பதாக வெளியான செய்திகளால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கொடி பிடித்துள்ளன.

ஆனால், அவர்களுக்கு பின்னே வைகோ, நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் இருப்பதாக எண்ணி, அவர்களை கத்தி படக்குழு சந்தித்து விளக்கமளித்து வருகிறது. அப்படி அவர்கள் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசியபோது, கத்தி படத்தை ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கவில்லை என்றால் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம்.

அதேசமயம், அவரது நண்பர்தான் தயாரித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டால், படத்துக்கு கண்டிப்பாக எங்கள் ஆதரவு கிடைக்காது. படத்தை தடை செய்யும் முயற்சியிலும் இறங்குவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளாராம். இதனால் கத்தி டீம் மேலும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: