செய்திகள் 62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒரே நாளில் இறந்த தம்பதியர்!…

62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒரே நாளில் இறந்த தம்பதியர்!…

62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒரே நாளில் இறந்த தம்பதியர்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர், டான் சிம்ப்சன். 1950-களில் தனது வாலிபப் பருவத்தின் வசந்த காலத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் மேக்ஸைன் என்ற இளம்பெண்ணை கண்ட இவர், முதல் சந்திப்பின்போதே அவர் மீது காதல் வசப்பட்டார்.சிறு வயதில் இருந்தே உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்த டான், மேக்ஸைனின் மனதிலும் அதே போன்ற ஆசை இருப்பதை அறிந்துக் கொண்டார்.

‘நமக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவி இவள்தான்..’ என்று முடிவு செய்து, தனது காதலை வெளிப்படுத்தியபோது மேக்ஸைனும் அதை தட்டாமல் ஏற்றுக் கொண்டார்.1952-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்த இளஞ்ஜோடிகள், ஜெர்மனி மற்றும் ஐரோப்பியா கண்டத்தின் பல நாடுகளில் உல்லாசப் பறவைகளாக சுற்றித் திரிந்தன. ஜெர்மனியில் உள்ள ஒரு அனாதை விடுதியில் இருந்து இரட்டைப் பிறவிகளான ஒன்றரை வயது ஆண் குழந்தைகளை தத்தெடுத்த இவர்கள் சில ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கு திரும்பினர்.டான் சாம்ப்சன் என்ஜினியராகவும், மேக்ஸைன் நர்ஸாகவும் வேலை செய்து வந்தனர். எந்த காரியத்தை செய்தாலும், இணைந்தே முடிவெடுத்து, எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சேர்ந்தே போய் வந்த இவர்கள், எவ்வித கருத்து பேதமும் இல்லாமல் தங்களது இல்லற வாழ்க்கையின் 62 ஆண்டுகளை இன்பமாக கழித்து மகிழ்ந்தனர்.

சமீபகாலமாக இருவரின் உடல்நிலையும் முதுமையால் குன்றியது. இறுதிக் காலத்தில், தங்களது தத்துப் பிள்ளைகளில் ஒருவரின் மகளான பேத்தி மெலிஸா என்பவர் வீட்டில் ஒரு தனியறையில் இந்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர்.கடந்த மாதம் 21-ம் தேதி காலை 7 மணியளவில் மேக்ஸைனின் இறுதி மூச்சு நின்றது. அவரது பிரேதத்தை அந்த அறையில் இருந்து கொண்டு செல்வதை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த டான், அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த உலகை பிரிந்தார்.என் பாட்டியின் உடல் அந்த அறையை விட்டு சென்ற போது, தாத்தாவின் உயிரும் பின் தொடர்ந்து சென்று விட்டது என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார், மெலிஸா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி