செய்திகள் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!…

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!…

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர்!… post thumbnail image
புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமி, சோனு(பெயர் மாற்றப்பட்டுள்ளது).பள்ளிக்கு செல்வது என்றாலே துள்ளிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்பும் சோனு, கடந்த 10 நாட்களாக ஏதேதோ சாக்குப் போக்குகளை மாற்றி, மாற்றி சொல்லி பள்ளிக்குப் போவதை தவிர்த்து வந்தாள். கடைசியில், பள்ளிக்குப் போகவே மாட்டேன் என்று தீர்க்கமாக அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள தவறிய பெற்றோர், வம்படியாக, இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போயே தீர வேண்டும் என்று கண்டிப்பாக கட்டளையிட்டு அவளை வழக்கமாக பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் வேனை நேற்று காலை வரவழைத்தனர்.பள்ளி வேன் வீட்டின் வாசலருகே வந்து நின்றவுடன் விம்மி, வெடித்து, கதறியழுத சோனு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனது பிஞ்சு நெஞ்சத்தில் பொத்தி வைத்திருந்த அந்த துயரத்தையும், வேதனையையும் கொட்டித் தீர்த்தாள்.

சம்பவத்தன்று, தன்னை தொடக் கூடாத பாகங்களில் எல்லாம் தொட்டு, அந்த வேனின் டிரைவர் வேதனைப்படுத்தியதாக திகைத்துப் போய் நின்ற தாயிடம் சோனு அழுதபடி கூறினாள்.உடனடியாக அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த கோவிந்த்புரி நிலைய போலீசார், வேனின் டிரைவர் விபின்(33) என்பவனை கைது செய்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றம் (தடுப்பு) சட்டப்பிரிவு 376/511-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி