செய்திகள்,திரையுலகம் நடிகர் ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்னை?…

நடிகர் ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்னை?…

நடிகர் ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்னை?… post thumbnail image
சென்னை:-இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் இணைந்து நடித்தனர். பொதுவாக ஆர்யா தான் நடிக்கும் படங்களில் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் நெருக்கமாக பழகுவார். அந்தவகையில் அவர் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அப்படி இரண்டாம் உலகம் படத்தில் நடித்த அனுஷ்காவுடனும் ஆர்யா கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் நெருங்கி பழகுவதாகவும் செய்திகள் வந்தன. மேலும் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் இருந்து இருவரும் வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் பதறி ஓடினர்.

இந்நிலையில், சமீபத்தில் தனது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக வெளியிட்டார். அதில் தன்னுடன் நடித்த பூஜா, திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை வரவழைத்து இருந்தார். ஆனால் இந்த விழாவில் அனுஷ்காவையும் அழைத்து இருந்தார் ஆர்யா. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதால் தான் இந்த விழாவில் அனுஷ்கா பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்துள்ளார் ஆர்யா.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் அமராகாவியம் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, அனுஷ்கா, பாகுபலி படத்தில் பிஸியாக இருந்தார், அதனால் தான் அவர் பங்கேற்கவில்லை, மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி